
அடி மடியில் கை வைத்தவன் நாளைக்கு அண்ணாக்கயிறை அறுக்காமல் விடுவானா? தன்னிறைவு தமிழகத்தை பாலைவனமாக மாற்ற வேண்டும் என்கிற கனவு சிலருக்கு! அதை தடுப்பதற்கு சரியான வழியை யார் சொன்னால் என்ன? பாலமுருகன்தானே தந்தை சிவனுக்கே பாடம் சொன்னான் என்கிறோம்!
அதைப்போல இசை அமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் ஓர் அருமையான யோசனை சொல்லி இருக்கிறார்.அதை காவிரிக்காக போராடுகிறவர்கள் பரிசீலிக்கலாமே!
“காவிரி மேலாண்மைக்கு நாம் போராடும்போது இந்த கோரிக்கையை முன் நிறுத்துவோமே !காவிரி மற்றும் டெல்டா பகுதிகளை ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்’ என்பதாக அறிவிக்க வேண்டும்.
பெட்ரோல் எடுக்கும் பகுதிகளை பாதுகாக்கும் நாம் ஏன் உண்ணும் உணவிற்காக விவசாயத்துக்கு அதை செய்யக்கூடாது?
இப்படி அறிவிக்கும் பட்சத்தில் காவிரி,டெல்டா பகுதிகளில் மணல் கொள்ளை, ஹைட்ரோகார்பன் ,ஆலைவிதிமீறல்கள்,போன்ற எதுவும் செய்ய முடியாது” என்கிறார் ஜி.வி.பி.
நடிகர் விவேக் இன்னொரு ஐடியா சொல்லி இருக்கிறார்.
“சில பிரச்னைகளை அரசு மூளை யோசிக்காமல் இதயத்தினால் யோசித்தால் தீர்வு கிடைக்கும்” என்கிறார்.
மூளையும் இதயம் இல்லாமல் வெறும் ‘ரோபோ’வாக இருந்தால்?












