
கடுமையான தாக்குதல்தான்! ஆனால் சொரணை என்பது எதிராளிக்கு இருக்க வேண்டும் அல்லவா? சொரிந்து விட்டு போனால் என்ன செய்ய முடியும்?
மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன் இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் மத்திய -மாநில இரண்டு அரசுகளையும் துவைத்துக் காயப்போட்டு விட்டார். மாலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் என்னென்ன ஏவுகணைகளோ?
“2016-ல் நான்கு வாரங்களுக்குள் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்திரவிடப்பட்டது! என்னென்னவோ சாக்குப் போக்குகள் சொல்லி தாமதப்படுத்தினார்கள்.
இன்றும் அதே கதைதானே! வாரியம் அமைப்பது மத்திய அரசு கடமை. அது நடக்குமா? மத்திய அரசு மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோ, போலியான ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தோ தமிழக அரசு தனது இயலாமையை மறைக்க முடியாது.மத்திய அரசின் எடுபிடி மாதிரிதான் தமிழக அரசு நடக்கிறது”
இதற்கெல்லாமா அதிமுக அரசு அசையப் போகிறது!












