கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியனுடன் மதுரைவீரன் படத்தில் ஜோடி கட்டியவர் இந்த சொப்பன சுந்தரி மீனாட்சி. நல்ல தமிழ் பேசத் தெரிந்த பள்ளி மாணவி.பெரும்பாலான தமிழ்ப்பட நடிகைகள் பள்ளிப் பருவத்திலேயே கதாநாயகியாக பட்டம் மாட்டிக் கொண்டவர்கள் தான் !
“ஏம்மா…மதுரைவீரன் படத்துக்கு அப்புறமா உன்னை பார்க்க முடியலியே ஏன்?” என்று கேட்டால் அப்பாவியாக பதில் சொல்கிறது கேரளத்துக் கிளி!
“பிளஸ் ஒன் எக்ஸாம் எழுத வேண்டியதாக இருந்தது. அதனால வந்த வாய்ப்புகளை பயன் படுத்த முடியல. நான் மாடர்ன் பொண்ணு. இளமையாக இருக்கிறேன். என்னை கிராமத்துக் கதாநாயகியாகவே காட்ட விரும்புகிறார்கள்.எனக்கு வயது இருக்கு. அல்ட்ரா மாடர்ன் கேரக்டர்களுக்கு பொருத்தமாக இருப்பேன்.” என்கிறார்.