சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடிக்காவிட்டாலும் பரவாயில்லை அவரின் பெயரையாவது கேரக்டருக்கு வைங்க சாமிகளா என்று நடிகைகள் காத்திருக்கும் காலம் இது!
“ஒரு சீனாவது நடிச்சா போதும்! அட, சம்பளமே வேணாம்யா.!” என அலை பாய்கிறார்கள் ஆண்களும் பெண்களும்! ஆனால் ‘காலா’ படத்தில் ரஜினியின் ஒரிஜினல் பெயரிலேயே நடிப்பதற்கு ஒரு நடிகைக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
தாராவியில் தமிழ் பேசுகிற மராத்திய பெண்ணாக நடித்திருக்கும் அந்த நடிகையின் பெயர் நந்தினி படேல். மராத்தியை சேர்ந்தவர். படத்தில் அவரது பெயர் புயல் சாருமதி கெய்க்வாட்.
சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஒரிஜினல் பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட்.
இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு ரசிகர்கள் ‘கட்டவுட்’ வைக்காமல் விட மாட்டார்கள்.
சீக்கிரமா படத்தை காமிங்கப்பா!