இன்று காலை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் டிஜிட்டல் ப்ரவைடர்களில் ஒன்றான AEROX நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. படத்தயாரிப்பாளர்கள் தங்களது வாழ்வாதரத்திற்காக போராடிய கடும்போராட்டத்தில் இந்த நிகழ்வு முக்கியமான மைல்கல் ஆகும். DCI approvel பெற்ற நிறுவனமான aerox மற்ற டிஜிட்டல் ப்ரவைடர்கள் வசூலிக்கும் கட்டணத்தில் 50% க்கும் குறைவான கட்டணத்திற்கு தயாரிப்பாளர் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார்கள் . இது சிறு படத்தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும் எனக் கூறப்படுகிறது.