குயில் கூவும், கோல மயில் ஆடும், தழுவிச்செல்லும் தென்றலில் நந்தவனம் மணம் கமழும்.!
சுருங்கச்சொன்னால் அது ஒரு சுந்தரவனம்.
கலைப்புலி தாணுவின் அலுவலகம்.
“இன்ப நாளிது,இனிய நாளிது”என்கிற கரும்புச்சொல்லுக்குரிய வெள்ளைச்சட்டைக்காரரின் அலுவலகத்தில் கற்பூர மணம்!
“முடியும் உங்களால், முயன்று பாருங்கள்” என்று என்னை வினைச்சொல்லாக மாற்றிய அந்த வித்தகரின் கரம் பட்டு ‘சினிமா முரசம்‘ எனக்கு உயிர்ச்சொல்லாக மாறியது.
என்னுடன் வந்திருந்த மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, வெப் சைட் டிசைனர் ,பி.ஆர் .ஓ.வாகிய கே.எஸ் .செல்வா .ஒளி ஓவியர் சுரேஷ் ஆகியோருக்கு நன்றிகள் கோடி.!
இனி உங்களின் ஆதரவுடன் வளர்வோம்!