ஒத்தையடிப் பாதையில் இருள் சாய்ந்ததும் நடந்து செல்வதற்கு சிலர் பயப்படுவார்கள். அதிலும் தனித்து நடப்பது என்றால் இல்லாத தெய்வங்களை எல்லாம் கடல் கடந்து வந்தாவது காப்பாற்றச் சொல்லி நேர்த்திக்கடன் வைப்பார்கள். அப்படி ஆகி விட்டது தமிழக அரசு.!
கமல்,ரஜினி ஆகியோர் கல்லூரிகளில் அரசியல் பேசுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று கல்லூரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை கல்லூரிக் கல்வி இயக்ககம் அனுப்பி இருக்கிறது.
திராவிட இயக்கங்கள் வளர்ந்ததே கல்லூரிகளில்தான்! அதைப்போல கமல் ரஜினி ஆகியோரும் வளர்ந்து விடுவார்களோ என அரசாங்கம் நினைக்கிறதோ என்னவோ! நடிகர்கள் இருவரது திரைப் படங்களும் அரசியல்தானே பேசுகின்றன. .அதனால் மாணவர்களுக்கு தடை போட முடியுமா?
கரப்பான் பூச்சிக்கு பயந்து கரண்டு கம்பியை தொடாமல் இருந்தால் சரி!