நடிகர் விஷால் நடிப்பில் வரும் மே மாதம்11 ந்தேதி வெளியாகவுள்ளபுதிய படம் இரும்புத்திரை. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க அர்ஜுன் வில்லனாக நடித்துள்ளார்,இந்நிலையில் இப்படத்தை மிழக வெளியீட்டு உரிமை வாங்கியுள்ள ஸ்ரீதரன்மற்றும் புலி படத்தை தயாரித்த பி. டி .செல்வகுமார் ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது,’இப்படத்தை வெளியிட விடாமல் சென்னை செங்கல்பட்டு மாவட்ட விநியோகஸ்தர் சங்கத் தலைவர் அருள்பதி மற்றும் பெடரேஷன் தான் அருள்பதி மிரட்டியதற்கான ஆதார ஆடியோவும் எங்களிடம் உள்ளது. அதை தமிழக காவல் துறை, சி.பி.ஐ போலீஸ் மற்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து நியாயம் வேண்டி புகார் கொடுப்பதோடு வழக்கும் தொடருவேன் .அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஏரியாவுக்கும் 5 சதவீதம் கமிஷன் கேட்டு மிரட்டுகின்றனர். மேலும் இது குறித்து தமிழகமுதல்வரை நேரில் சந்தித்து முறையிடவும் உள்ளேன். திரையுலகை இதுபோன்ற மாபியா கும்பல் மிரட்டி வருவதை இனியும் அனுமதிக்க முடியாது.முன்பு சிவகார்த்திகேயனுக்கும் இது போன்ற நிலை வந்தது. அவர் அமைதியாக இருந்து விட்டார் நாங்கள் இதை சும்மா விட மாட்டோம்’ இவ்வாறு அவர் கூறினார்.