2015-ம் ஆண்டு வெளியான ‘மாரி’ படத்தைத் தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘மாரி 2’. முதல் பாகத்தில் நடித்த தனுஷ் இதிலும் கதாநாயகனாக நடிக்க, சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார்.இவர்களுடன்,கிருஷ்ணா, வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர், அறந்தாங்கி நிஷா, ‘கல்லூரி’ வினோத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர் .இப்படத்தை தனுசின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துவருகிறது.யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரு கிறார். இதில் ‘அராத்து ஆனந்தி’ என்ற கேரக்டரில் ஆட்டோ டிரைவராக நடித்து வருகிறாராம் சாய் பல்லவி.