கர்நாடகத் தேர்தலுக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை டெல்லிக்காரர்கள் தள்ளிக் கொண்டே போனார்கள். எதிர்பார்த்த ரிசல்ட் வரவில்லை. தெற்கில் வாலைக்கூட நுழைக்க முடியாது என்பதை உணர்ந்து ” ஒரு எம்.எல்.ஏ.க்கு நூறு கோடியும் அமைச்சர் பதவியும் என்றெல்லாம்”பேரம் பேசி வருவதாக முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மகன் குமாரசாமி குற்றம் சாட்டி இருக்கிறார்,
ஆனால் மேலாண்மை வாரியம் அமைத்துக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இதனால் காவிரியில் தண்ணீர் வந்து விடுமா?
விவசாயிகளும் அரசியல் கட்சிகளும் விடுவதாக இல்லை.
இதற்கிடையில் உலகநாயகன் கமல்ஹாசன் ரகசியமாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தொலைபேசியில் பேசியிருப்பதாக ஒரு செய்தி நடமாடிவருகிறது.
கயிறு கட்டிவிடுகிறார்களா ,அல்லது உண்மையாகவே நடந்திருக்குமா என்பது தெரியவில்லை.
ஆனால் பேசப்படுகிற செய்தி இதுதான்.!
“காவிரி தண்ணீர் பிரச்னைக்காக இரண்டு பேரும் ஒரு இடத்தில் மக்களைத் திரட்டி பேசலாமா ?”
பிஜேபியுடன் உறவு இல்லை என்பவர் ரஜினி.
“காவியே உள்ளே வரக்கூடாது “என்பவர் கமல்.
இரண்டு பேரும் பேரணி நடத்தினாலும் பலன் என்னவாக இருக்க முடியும்?