சில நாட்களுக்கு முன்பு ஆர்.ஜே. பாலாஜி அரசியலில் இறங்கப் போவதாகவும், தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் தகவல்கள் வெளியானது. டுவிட்டரிலும் இது குறித்து கருத்து தெரிவிதிருந்தார் ஆனால், அது ஒரு படத்துக்கான விளம்பரம் என் தெரியவந்தது. இந்நிலையில்,‘எல்.கே.ஜி.’ என தலைப்புடன், பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. அரசியல் படமாக உருவாகும் இதில்,கதாநாயகனாக நடிக்கிறார் பாலாஜி. அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். ஐசரி கணேஷ்தயாரிப்பில் ,ஆர்.ஜே. பாலாஜி கதை, திரைக்கதை எழுதி, இப் படத்தின் மூலம்கதாநாயகனாகவும் களமிறங்குகிறார்.பிரபு இயக்குகிறார். பிரபல அரசியல்வாதியும், இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் இந்த படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விது அய்யண்ணா ஒளிப்பதிவில், லியோன் ஜேம்ஸ் இசையமைக்கும் இந்தப் படத்தின் இசை உரிமையை, திங்க் மியூஸிக் நிறுவனம் வாங்கியுள்ளதாம்.