பிஜூமேனனை காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர் சம்யுக்தா .கல்யாணத்துக்குப் பின்னர் பலர் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். சம்யுக்தாவும் நடிக்க வருவாரா?
“சினிமா எனக்கு கடவு
ள் மாதிரி! கும்புடுகிறேன். இப்ப எதுக்காக நான் நடிக்கணும்?கதையோ,கேரக்டரோ, பிடிச்சிருக்கனுமே! அப்படியே கதை பிடிச்சாலும் வீட்டை யார் பார்த்துக்குவா? ஸ்டிரெஸ்.!தேவையா எனக்கு ?அப்புறம் நானும் அவரும் சண்டை போடனும்.அவர் பிசியா இருந்தால் போதும்.எங்கள் வாழ்க்கை ஸ்மூத்தாக போயிட்டிருக்கு, பையனை பார்த்திட்டிருக்கேன்.நடிக்க போயிட்டா எல்லாமே ஸ்பாயில்தான்!” என்றவரிடம் சந்தடி சாக்கில் ஒரு கேள்வி!
“மது அருந்தும் பழக்கம் உண்டா?”
“நான் யோகி! எனக்கு மது அவசியமில்ல.யோகாதான் முக்கியம். அவருக்கு கடுமையான வேலை இருந்தால் கொஞ்சம் சாப்பிடுவார்” என்கிறார் சம்யுக்தா.