மலையாளி நடிகர் சங்கத்துக்கு ( அம்மா) புதிய தலைவராக மோகன்லால் தேர்வு செய்யப்படவிருக்கிறார். தற்போதைய தலைவர் இன்னசன்ட் ,செயலாளர் மம்மூட்டி இருவரும் விலகிக்கொள்ள அவர்களுடைய பதவிகளுக்கு ஒரு மனதாக புதியவர்களைத் தேர்வு செய்யப்போவதாக தெரிகிறது.
தலைவராகிறார் மோகன்லால் என்கிறார். செயலாளர்தான் யார் என்பது தெரியவில்லை. இந்த மாதம் இருபத்தி நான்காம் தேதி முக்கியப் பொதுக்குழு கூடுகிறது
யார் தலையை உருட்ட இந்த பொதுக்குழு?
பிருத்விராஜ், ரம்யா நம்பீசன்.
இவர்கள் இழைத்த குற்றம் என்ன?
பாவனா பாலியல் ரீதியாக தாக்கப்பட்டபோது இவர்கள் இருவரும் சங்கத்தின் மீது பகிரங்கமாக குற்றம் சுமத்தினார்கள் என சொல்கிறார்கள்.
பொதுக்குழுவில் இருவரும் மன்னிப்புக்கேட்டால் நடவடிக்கை இருக்காது என்கிறார்கள்.