
இன்று கவியரசர் கண்ணதாசனின் பிறந்த நாள். ஜூன் இருபத்தி நான்கு.அவரது வரிகளைக் கொண்டே இந்த செய்தியைத் தொடங்குவோமே!
“கடல் அருகே வீற்றிருந்தும் கடுந்தாகம்
வரும்பொழுதே,
கடவுளெனும் ஒருவனது கைச்சரக்கு
நினைவு வரும்”
அதைப்போல பருவகாலம் முதிரும் நிலையில்தான் சிலருக்கு மணமேடை அவசியமாகிறது .!செல்வாக்கும் செல்வமும் சேர்ந்திருந்தாலும் வாழ்க்கை முழுமை பெற இல்வாழ்க்கை இணை இனிது அல்லவா?அதை தேடுகிறார் அனுஷ்கா.
மணத்தடைகள் நீங்குவதற்காக பூஜைகள்,யாகங்கள்,மந்திரக்கயிறுகள் என அனுஷ்காவின் பெற்றோர் இறங்கி இருக்கிறார்கள்.
அரேஞ்சிடு மேரேஜ்தான்! அனுஷ்காவும் ஓகே!
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் அனுஷ்கா,ரம்யாகிருஷ்ணன், நயன்தாரா ஆகிய மூவரும் சந்தித்துக் கொண்டார்கள்.அதிசயத்திலும் அதிசயமாக இந்த முப்பெரும் தேவியர் கூடி விட்டனர்.
ரம்யாவுக்கு கல்யாணம் நடந்து பையனும் இருக்கிறான் .
அனுஷ்காவுக்கு மாப்பிள்ளை வேட்டை நடக்கிறது.
நயனுக்கு காதலருடன் லிவ் இன் ரிலேஷன்!
அடுத்தபடம் ஒப்பந்தம் ஆவதற்குள் மாப்பிள்ளை யார் என்பது அனுஷ்காவுக்கு முடிவாகி விடும்.
ரம்யாவுக்கு நாக சைதன்யாவின் படம்.அனு எம்மானுவேல் நடிக்கிறார்.
லிவ் இன் ரிலேஷன் என்பது திருமணமாக மாறுமா என்பது இந்த ஆண்டு முடிவதற்குள் தெரிந்து விடுமா?
கர்த்தர் கருணை புரிவாராக!












