சாதனைகளை செய்ய வேண்டுமானால் சோதனைகளைத் தாங்கித் தான் ஆகவேண்டும்.
“வெறும் கமர்சியல் ஹீரோவாகவே இருந்துட்டுப் போறேன்” என்பவர்களைப் பற்றி கவலை இல்லை.ஆனால் அவர்களால்தான் நம்பர் ஒன் நிலையில் இருக்க முடிகிறது. அவர்களுக்குத்தான் ரசிகர்களும் அதிகமாக இருப்பார்கள். நம்பர் ஒன் அண்ட் கமர்சியல் ஹீரோ ஆக இரண்டும் கலந்து சிலர்தான் இருக்க முடிகிறது.
“என்னைப் போல குள்ளனாக நடிக்க முடியுமா ?”என்று இந்திய நடிகர்களுக்கு சவால் விட்டவர் உலக நாயகன் கமல்ஹாசன். அதன் பின்னர் தசாவதாரம் வரை போய் விட்டார். இவரைப்போல தங்களை உருமாற்றிக் கொண்டவர்களில் விக்ரம்,சூர்யா ஆகியோரை சொல்லலாம்.ஆஸ்கார் ‘ஐ’ விக்ரம் ,ஏவி.எம்.பேரழகன் சூர்யா.7 மெழுகுவர்த்திகள் ஷாம் .
.இம்மூவரைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்?
தங்களை வருத்திக்கொண்டு நடித்தவர்கள் இவர்கள். அதிலும் விக்ரம் தனது முகத்தை முழுமையாக கோரமாக்கிக்கொண்டவர். சூர்யா இரட்டை வேடங்களுக்காக உடம்பை கடுமையாக வருத்திக் குறைத்துக் கொண்டார். வலி அவர்களுக்குத்தான் தெரியும்.
கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியால் உரு மாறியவர்களைப் பற்றி இங்கு பேசவில்ல்லை.
வடக்கில் குள்ளமாக நடித்திருப்பவர் ஷாருக்கான்.
இப்படியெல்லாம் சாதனைகளை செய்து வழி காட்டியிருந்தாலும் அவர்களைப் பின் பற்றுகிற ஆர்வம், அக்கறை இளைய தலைமுறையினருக்கு இல்லாமல் போய்விட்டது!
“அப்படி சாதனை செய்வதால் என்ன பலன்? அத்தகைய படங்களுக்கு மார்க்கெட் வால்யூ என்ன? மக்களின் வரவேற்பு இருக்குமா?
நியாயமான கேள்வி!