எதுதான் தமிழ்ச்சினிமாவில் உருப்படியா இருந்தது?
கோஷ்டிகளுக்கும் குறை இல்லை. சண்டைகளுக்கும் பஞ்சம் இல்லை. தற்போது தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திலும் பங்காளிச் சண்டை,!
உடைஞ்சி போச்சு!
கதைய கேளுங்க !
தமிழ் நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு பிலிம் எக்ஸிபிட்டர்ஸ் அசோசியேசன் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு,
அதன் தலைவர் அண்ணாமலை தலைமையில் இயங்கி வந்தது. பொதுச்செயலாளராக பன்னீர் செல்வம் இருந்து வந்தார்.
இச் சங்கத்தில் பெருவாரியான உறுப்பினர்களின் விருப்பப்படியே ஒவ்வொரு தடவையும் தேர்தல் இல்லாமல் நிர்வாகிகள் தேர்ந்தடுக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.ஆனால், புதிய நிர்வாகிகளை தேர்தல் மூலம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என சில நிர்வாகிகள் கோர்ட்டுக்கு சென்றுள்ளனராம் .
இந்நிலையில்,சங்கத்தின் மீது அதிருப்தியில் உள்ள உறுப்பினர்கள் தனியாக பிரிந்து, தமிழ்நாடு தியேட்டர்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் என்ற பெயரில் புதிய திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தை உருவாக்கி உள்ளனர்.
இச் சங்கத் தலைவராக திருப்பூர் சுப்பிரமணியமும், துணை தலைவராக சரஸ்வதி முத்தனனும், பொதுச் செயலாளராக பன்னீர் செல்வமும், செயலாளராக சேலம் இளங்கோவும், கூடுதல் செயலாளராக ராம்நாடு தினேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
ஏற்கனவே அபிராமி ராமநாதன் தலைமையில், சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அண்ணாமலை தலைமையில் இயங்கி வரும் சங்கத்துக்கு விரைவில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது
எத்தனை சங்கம் வந்தால் என்ன படம் பார்க்க வருகிறவனுக்கு எந்த நன்மையையும் இல்லை. வீட்டிலிருந்து குடிக்க தண்ணீர் கூட கொண்டு போக முடியாது.