தமிழ்த் திரை உலகத்தில் எத்தனையோ சங்கம் இருந்தாலும் சினிமாவுக்கு பைனான்ஸ் செய்பவர்களுக்கு தனியாக சங்கம் இல்லை. தற்போது அதுவும் வந்து விட்டது. இந்த சங்கத்தில் விநியோகஸ்தர்கள் தியேட்டர் ஓனர்கள் இருக்கிறார்கள்.
இந்த சங்கத்துக்கு பிள்ளையார் சுழி போட்டவர்கள் திருப்பூர் சுப்பிரமணியம்,மதுரை அன்புச்செழியன் ஆகிய இருவர் என சொல்லப் படுகிறது..இந்த புதிய அமைப்பில் அபிராமி ராமநாதன் உள்ளிட்ட 18 வட இந்தியர்களும் இருக்கிறார்கள்.
இதில் என்ன வேடிக்கை என்றால் “யாருக்கு கடன் கொடுக்கலாம் ” என்பதை இந்த புதிய அமைப்புதான் முடிவு செய்யுமாம்.
இது போதுமே,பிரச்னைகளுக்கு பஞ்சமே இருக்காது!