நினைத்ததை பிரமாண்டமாக நடத்திக்காட்டுகிற வல்லமை கலைப்புலி தாணுவுக்கு இருக்கிறது. பிரமாண்டங்களை அள்ளித் தருகிற அவரும் கமர்ஷியல் ஹிட் அடிக்கும் தனுஷும் மறுபடியும் இணையப் போகிறார்கள், வேலை இல்லாப்பட்டதாரியைத் தொடர்ந்து மிகவும் பிரமாண்டமான படத்தைக் கொடுக்க வேண்டும் என்பது தாணுவின் கனவு.
ஸ்கிரிப்ட் வேலைகள்,மற்றும் நட்சத்திரத் தேர்வு இயக்குநர் தனுஷின் கையில் !.மாரி 2 வேலைகள் முடிந்ததும் புதிய படத்தின் வேலைகளைத் தொடங்கி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.