இதுநாள் வரை படுத்துக்கிடந்த பிக்பாஸ் தற்போதுதான் எழுந்து உட்கார்ந்து இருக்கிறார். “எல்லாருமே நடிக்கிறாங்க”என்று தூண்டி விட்ட பிறகு சுவாரசியம் கூடி இருக்கிறது. பொன்னம்பலம் சண்டை சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. டேனியலை தூண்டி விட்டிருக்கிறார்கள். தனது கல்விப் பயணத்தை பொன்னம்பலம் நினைவு கூர்ந்து கண்ணீர் விட்டபோது உலகநாயகன் கமல்ஹாசனும் கலங்கிவிட்டார். கோபம் வெளிப்பட்டது.
“ஏழைகள் படிப்பதற்காகவே கல்வித்திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார் அந்த கல்வியை வியாபாரமாக மாற்றியது எவ்வளவு பெரிய மடத்தனம்”என்று ஒரு காய்ச்சுக் காச்சினார்.. தன்னுடைய கோபத்தையும் கண்ணீரையும் நடிப்பு என்பதாக நினைத்தால் நினைத்துக் கொள்ளட்டுமே என்று ஏகடியம் பேசுகிறவர்களுக்கும் ஒரு அடி.