அடி வாங்குறதுன்னு முடிவு பண்ணிட்டா அது பெரிய மனுசன் கையில வாங்குற அடியா இருக்கணும். “அவ்வளவு பெரிய மனுசன்கிட்ட அடி வாங்குன ஆளா நீன்னு ஊர் உலகம் பேசணும்” என்று எதிர்பார்த்தது போல இருக்கு பைனான்சியர் போத்ராவின் நடவடிக்கை. “ரஜினியின் சம்பந்தி கஸ்தூரிராஜாவுக்கு 65 லட்சம் கடன் கொடுத்தேன்.அதற்கு ரஜினி உத்திரவாதம் கொடுத்தார் ” என்பதாக ரஜினி மீதும் வழக்குத் தொடர்ந்திருந்தார் போத்ரா. இதற்கு “தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் வழக்குத் தொடரப்படிருப்பதாக” ரஜினி சொல்லியிருந்தார்.
வலக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் “வீண் விளம்பரத்துக்காக போத்ரா வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.இது போன்ற வழக்குகளை ஆரம்பத்திலேயே தூக்கி எறிய வேண்டும்” என சொல்லி போத்ராவுக்கு 25 ஆயிரம் அபராதமும் விதித்திருக்கிறது.