ஆண்களே ஆடிப்போகும் விஷயம். எவ்வளவுதான் கல் மனதுக்காரராக இருந்தாலும் பயத்திலேயே பாதி உயிரை கரைத்து விடுவார்கள். புற்று நோய் என்றால் அவ்வளவு பயம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக வெளியில் சொல்லாமல் காத்து வந்த செய்தியை கஸ்தூரி இன்று வெளியிட்டிருக்கிறார். கஸ்தூரிக்கு ஒருமகள்,மகன் உள்ளனர்.மகன் பெயர் சங்கல்ப் ,மகள் பெயர் ஷோபினி. இதில் ஷோபினிக்கு தான் ரத்த புற்றுநோய் , வண்ணத்து பூச்சியாய் சிறகடித்து ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில் அமெரிக்காவில் சிகிச்சையில்.
இடிமேல் இடியாய் ……..
அவரது அம்மாவுக்கும் புற்று நோய் . கஸ்தூரி அமெரிக்காவில் குழந்தைக்கு சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். கஸ்தூரியை விட அந்த குழந்தைக்கு தைரியம் .நன்றாகப் பேசும்.
புற்று நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருக்கும் ஒரே நடிகை இவர்தான்!