தினமும் ஒரு செக்ஸ் செய்தி சொல்லிவரும் ஸ்ரீ ரெட்டி இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். தன்னைப் பற்றி புகார் தெரிவித்திருக்கும் வாராகி என்பவர் மீது இன்று புகார் தெரிவித்திருக்கிறார்.
“வாராகி என்பவர் யார் என்பது எனக்குத்தெரியாது.என் விவகாரத்தில் தலையிட அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை. நான் எங்கே இருக்கிறேன் என இருப்பிடம் பற்றி விசாரித்திருக்கிறார், அவர் என்னுடைய அறைக்கு வர தயாராக இருக்கிறாரா? நடிகைகளை பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்கிறவர் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிகிறது ,பெண்கள் யாரும் அவருக்கு ஓட்டுப்போடக்கூடாது” என்று பத்திரிகையாளர்களிடம் பேசினார்.