பிரகாஷ்ராஜ் மீதான கோபம் இன்னும் பிஜேபிக்கு குறைய வில்லை. கர்நாடாகாவில் பிஜேபியின் தோல்விக்கு அந்த மனிதரும் ஒரு காரணம் .மோடியை விட்டு விளாசியவர்வர்களில் இவர் முக்கியமானவர். அதனால் இவர் மீதான கோபம் இன்னும் குறையவில்லை. “இந்தியாவை விட்டு வெளியேறு “என்று பிரகாஷ்ராஜுக்கு எதிராக கோஷமிடுகிறார்கள்.
இதற்கு என்ன பதில்?
“பக்தாஸ்! என்னை நாட்டை விட்டு வெளியே போன்னு சொல்ற பக்தாஸ்! இப்ப ரெண்டு வார ஹாலிடேஸ் எனக்கு ஆஸ்திரேலியாவில்.! புறப்படுறேன்!” என்று நையாண்டி செய்திருக்கிறார்.
பிஜேபி வம்பாண்டிகளுக்கு சரியான கொம்பாண்டி!