படப்பிடிப்பில் இருந்து சென்னை வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். கலைஞரை பார்க்க சென்றபோது அவர் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார், அங்கிருந்த ஸ்டாலின் ,அழகிரி,கனிமொழி ஆகியோரை சந்தித்துவிட்டு திரும்பி விட்டார். காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசுகையில் “இந்திய அரசியலில் மூத்த தலைவரான கலைஞரை சந்திக்க சென்றேன்.அவர் தூங்கி கொண்டிருந்தார்,
இதனால் ஸ்டாலின் அழகிரி கனிமொழி ஆகியோரைச்சந்தித்து ஆறுதல் சொன்னேன்.என்னால் ஆறுதல் மட்டும்தான் கூற முடியும். அவர் மிகவும் விரைவில் குணம் பெற்று வீடு திரும்பவேண்டும், என்று இறைவனை வேண்டிக்கொண்டேன்” என்றார்.













