எல்லோரும் காறித் துப்பவேண்டும் திட்டவேண்டும் என்பதுதான் பிக்பாஸின் ஸ்க்ரிப்ட் போலும். டிஆர்பி ரேட்டை உயர்த்த இப்படியும் ஒரு வழியை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஐஸ்வரியாவை மகாராணியாக்கி அவருக்கு சர்வ அதிகாரமும் கொடுத்து விட்டார் பிக் பாஸ். இதனால் அவருக்கு வேண்டாதவர்களை பழி தீர்க்க நல்ல வாய்ப்பு.
“இந்த போட்டியில் கலந்து கொள்ள மாட்டேன்” என்று ஒதுங்கி உட்கார்ந்து விட்ட தாடி பாலாஜி மீது எந்த நடவடிக்கை எடுக்கவும் நியாயமில்லை.ஆனால் ராணி சர்வாதிகாரியாச்சே ! குப்பையை பாலாஜி தலை மீது கொட்ட சொல்கிறார். ஒரு கட்டத்தில் அவரே குப்பையை கொட்டுகிறார். இதன் பிறகுதான் ரவுத்திரம் அதிகமாகிறது.
அவருக்கு வேண்டாதவர்களின் பொருட்களை ஸ்விம்மிங் பூலில் போடச்சொல்லி விட்டு உட்கார்ந்தபின்னர் பார்க்கணுமே ஆத்திரத்தை!
இந்தியை பயன்படுத்தக் கூடாது என்று கமல் சொல்லி இருந்தும் அவருக்கு மரியாதை கொடுக்கவில்லை மகாராணி. இந்தியில் திட்டியபடியே “த்தூ நாய்,,நாய் ” என்று சொல்லிய படியே.. பா…….ட் என ‘ம்யூட் மோடில்’ திட்டியது அநாகரீகத்தின் உச்சம், அசிங்கம். பிக்பாஸின் அரக்கத்தனம், அடுத்து இதே வார்த்தையை பயன் படுத்துகிறபோது அறை விழுவது போன்று ஒரு சீன் வைத்திருப்பார்கள் என்பதாக யூகிக்க முடிகிறது. எல்லாமே நாடகம்தான் என்றாலும் வரம்பு மீறிய ஸ்கிரிப்ட் !