நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் திருமணத்தை நிறுத்திய பிரபல நடிகை?
தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் நடித்து வெளியான கீதா கோவிந்தம் படத்தின் பாடல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது.
ராஷ்மிகா மந்தனா மிகவும் பரபரப்பாக பேசப்பட்டார்.அதே சமயம் அந்த படத்தின் போஸ்டர் ஒன்றில் அவர் விஜய் தேவகொண்டாவுடன் ரொமான்ஸ் செய்வது போன்று இருந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலர் வறுத்தெடுத்தனர்.
நடிகர் ரக்ஷித் ஷெட்டியுடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு ராஷ்மிகா மந்தனா ஏன் இப்படி நடிக்கவேண்டும் என பலரும் விமர்சித்தனர்.
இந்நிலையில் தற்போது ராஷ்மிகா மந்தனா திருமணத்தை நிறுத்திவிட்டதாக தகவல் டோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. தற்போது சினிமாவில் மட்டும் கவனம் செலுத்த அவர் இப்படி ஒரு முடிவு எடுத்ததாக வதந்தி பரவியது.இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் மேனேஜர் இது நடக்க வாய்ப்பே இல்லை, சமீபத்தில் இருவரும் பெங்களூருவுக்கு ஒன்றாக ஒரு விழாவுக்கு சென்று வந்தனர். இதெல்லாம் தெரியாததால் தான் இப்படி வதந்தி பரப்புகின்றனர்” என கூறியுள்ளார்.ஆனால் இது குறித்து ராஷ்மிகா மந்தனா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.