
இன்று காதல்,நாளை கல்யாணம் என அவசரமாக கடந்து போகும் காலத்தில் பதினோரு ஆண்டுகள் காதலித்து வந்திருக்கிறார்கள் என்றால் அதுவும் சினிமாவைச் சார்ந்தவர்கள் என்றால் பாராட்டாமல் இருக்க முடியாது. ஸ்ரீ பிரியாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரைத்தான் 11 ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார் நடிகை சுஜா வாருணி.பிக்பாஸ் பேமஸ். “இனிமேல் நீ சிவகுமார்தான்.இந்தப்பெயரில்தான் நீ அழைக்கப்படவேண்டும் என்பது அன்னையின் ஆணை.!
“அன்பே நீதான் எனது பலம் .மனம் தளர்ந்த காலங்களில் ஊக்கம் ஊட்டியவள் நீ.கலங்கிய காலங்களில் மாமருந்தாக இருந்திருக்கிறாய்.எனது வழிகாட்டியே! எனதன்பே! விரைவில் நமது கெட்டிமேளச்சத்தம் கேட்கும்” என்று சிவகுமார் காதலி சுஜாவாருணிக்கு மோதிரம் அணிவிக்கும் படத்தை வெளியிட்டிருக்கிறார். இதற்கு சுஜாவின் பதில்.
“அத்தான்.உங்களை மனம் உருகிக் காதலிக்கிறேன்.”












