கரு நாக்கு உள்ளவன் சொன்னால் அது பலிக்கும் என்று சொல்வார்கள். அதைப் போல ரா.பார்த்தீபனின் நாக்கு கரு நாக்காக இருக்கக்கூடாதா? இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்து கலைஞரைப் பார்த்த பார்த்தீபன் அவரது ஸ்டைலில் செய்தியாளர்களிடம் பேசினார்.
“தளபதி படத்தில் தேவாவாக நடித்த மம்மூட்டி மருத்துவமனையில் இருப்பார். “தேவாவுக்கு ஒன்னும் ஆகாது என ரஜினி சொல்லுவார். ‘யார் சொன்னது டாக்டரா’ என்று அவரிடம் கீதா கேட்பார்.அதற்கு ரஜினி ‘தேவாவே சொன்னான்”என்பார்.அது போல “நான் நன்றாக இருக்கிறேன்னு”கலைஞர் வந்து சொல்லப் போகிறார். கலைஞருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் குணம் அடைய வேண்டும் என்று ஆயிரக்கணக்கானோர் பிரார்த்தனை செய்கிறார்கள். தமிழை நம்பியவர்களை தமிழ் கைவிடாது”என்றார்.
பார்த்தீபன் வாக்கு பலிக்கட்டும் .நாக்குக்கு நன்றி சொல்வோம்.!