தமிழ்நாட்டின் எந்த பிரச்னையானாலும் துணிந்து குரல் கொடுப்பவர் கேப்டன் விஜயகாந்த். சில சமயங்களில் அவருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் ஏழாம் பொருத்தமாகிவிடும்.ஆனாலும் அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படுவதில்லை.
ஜெயலலிதாவுடன் சட்டப்பேரவையில் நேருக்கு நேர் மோதிய ஒரே ஆள்! உடல் நலமின்றி மேல் சிகிச்சை பெறுவதற்காக மனைவி பிரேமலதா, மகன் சண்முகபாண்டியனுடன் அமெரிக்கா சென்றிருந்தார். இன்னும் சிகிச்சை முழுமை அடையாவிட்டாலும், நல்ல முன்னேற்றம் .ஆள் முன்னைப்போல் மாறி விட்டார். அங்கிருந்தபடியே அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. கலைஞர் உடல் நலம் பற்றி ஸ்டாலினிடம் விசாரித்திருக்கிறார்.அவரது படங்களை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். சோர்ந்திருக்கும் தேமுதிக தொண்டர்களுக்கு அமிர்தம் சாப்பிட்ட மாதிரி இருக்கிறது.!