சிவகார்த்திகேயன் நடித்து பொன்ராம் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் சீமராஜாவின் இசை வெளியீட்டு விழா மதுரையில் மிகப் பிரமாண்டமாக நடந்தேறியது . அன்றிரவே டீசர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது .இதை நாளில் நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தின் ‘திட்டம் போடத் தெரியல’ பாடலும் வெளிவரவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இசை அமைப்பாளர் அனிருத் அன்றே வெளியிட வேண்டாம் மறுநாள் வெளியிட்டால் போதும் என சொல்லிவிட்டார்.
அனிருத்தும் சிவகார்த்திகேயனும் நெருங்கிய நண்பர்கள் .நண்பருக்காக இதைக்கூட செய்ய மாட்டாரா அனிருத்.!