ஆறு மாதங்களுக்கு முன்னரே ஒப்புக்கொள்ளப்பட்ட இசை நிகழ்ச்சி என்பதால் தற்போது இசைஞானி இளையராஜா ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்.அவரால் கலைஞர் மறைவுக்கு வர இயலவில்லை. இந்த நிலையில் அவர் அங்கிருந்து வீடியோ செய்தி அனுப்பி இருக்கிறார்.
“தமிழ்ப்பெருங்குடி மக்களே!கலைஞரின் மரணச்செய்தி நமக்கெல்லாம் துக்க தினமாக மாறி விட்டது. இந்த துக்கத்திலிருந்து எப்படி வெளியேறப்போகிறோம் எனத் தெரியவில்லை.அரசியல் தலைவர்களில் கலைஞரே கடைசித் தலைவர்.தமிழ்ப்படங்கள் மூலம் சுத்தமான தமிழ் வசனங்களை அவர் அள்ளி அள்ளி வழங்கினார்.அரசியல்,கலை இலக்கியம் தமிழ் என அனைத்துத் துறைகளிலும் அவர் சிறந்து விளங்கினார்.அவரை இழந்தது ஈடு செய்ய முடியாத இழப்பு” என்பதாகச்சொல்லி இருக்கிறார்.