நட்சத்திர ஹோட்டலில் நடிகையின் பிறந்த நாள் என்றால் உற்சாகம் கரை புரளாதா…..ஆட்டம் பாட்டம் என கச்சேரி களை கட்டாதா… .. கூடவே சரக்கும் கலந்து விட்டால் கேட்கவே வேணாம். நடிகை சாயிஷாவின் பிறந்த நாள் பார்ட்டி இப்படித்தான் நடந்திருக்கிறது. ஆர்யா,டைரக்டர் விஜய் இன்னும் பலர் வந்து வாழ்த்தி இருக்கிறார்கள்.இவர்கள் ஜோதியில் கலந்து கொண்டார்களா என்பது தெரியவில்லை. அயல்நாட்டு சரக்கு என்றதும் விட்டு விளையாடிய சிலரை போதும்,போதும் என அனுப்பி வைப்பதற்குள் பெரும்பாடு ஆகி விட்டதாம்.