கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக, மழை வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக அம்மாநில மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ள நிவாரணத்துக்கு நிதி உதவி வழங்குமாறு, கேரளமுதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து நடிகர்கள் சூர்யா, கார்த்தி இணைந்து 25 லட்சம் ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்தனர்.இந்நிலையில்,கேரளாவில் கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.25 லட்சத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் நடிகர் கார்த்தி நேரில் வழங்கினார்.