ஊரே விழாக்கோலம்தான். நூறு நாள் ஓடினாலே பட்டி தொட்டி எல்லாம் பட்டாசு வெடிக்கும். தளபதி விஜய் ரசிகர்களுக்கு அன்று தீபாவளிதான்.நற்பணிகள் ,நலத்திட்டங்கள் என கைக் காசு போட்டு காஸ்ட்லியான ரசிகர்கள்டா என்று மீம்ஸ் போட்டு கலக்குவார்கள். தற்போது இன்டர்நேஷனல் விருதுக்கு பைனல் லிஸ்ட்டில் நாலு பேரில் இவரும் ஒருவர் என தேர்வாகி இருக்கிறார் விஜய்.
விஜய் ஜோசப், கென்னத், டைம் ஹசன் , ஜோசுவா ஜாக்சன் ஆகிய நால்வர்தான் பைனல் லிஸ்ட்டில் இருக்கிறார்கள். செப்.22 லண்டன் ஹில்டன் ஹோட்டலில் விருதுகள் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இன்டர்நேஷனல் அக்சீவ்மென்ட் அவார்ட்ஸ் என்பது பெயர்.
அடுத்த அறிவிப்பு எப்பய்யா வரும் என்கிற ஆவலில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.