அரிச்சந்திரனோடு போச்சு சத்தியமும் ,வாக்குச் சுத்தமும் என்பார்கள். தேர்தல் நடக்கிற போது கொடுத்த வாக்குறுதியை தேர்தல் முடிந்த பிறகு எந்த கட்சியாவது ஞாபகத்தில் வெச்சிருக்கா? அத மாதிரிதான் கங்கனா ரனாவத் வாக்குறுதியும் என்று சொல்லலாமா?
இவர் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர். அப்படி புகழ்ந்து பேசுகிறார்.
“ராணுவத்தினர் தேசத்துக்காக உயிரைத் தியாகம் செய்கிறார்கள். தேவைப்பட்டால் நானும் தேச சேவைக்கு வருவேன்.” என்று சொல்லும் அவர் “ராணுவத்திலா சேரப்போகிறார்,என்னிக்கி” என்று யாரும் கேட்டு விடாதீர்கள். அவர் தேச சேவை என்று சொன்னது அரசியலை! “அரசியலில் சேர்ந்தால் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன். பிள்ளை குட்டிகளும் பெற்றுக் கொள்ள மாட்டேன்”என்று வாக்குறுதியும் கொடுத்திருக்கிறார். எந்த அரசியல்வாதி இந்த மாதிரி சத்தியம் செய்து கொடுத்திருக்கிறான்,? சூப்பரோ சூப்பர்!