என்னமோ தெரியல ..விமானத்தில் உயர்வகுப்பில் பயணித்தாலும் சிறுமைக் குணம் அவர்களை இனம் காட்டிவிடுகிறது. ஆமிர்கானின் தங்கல் படம் அகில இந்திய அளவில் பெருமையைத் தேடித்தந்த படம். இதில் ஆமிர்கானின் மூத்த மகளாக நடித்திருந்தவர் சாயிரா வாசிம். எட்டு மாதங்களுக்கு முன்னர் இந்த சிறுமி டெல்லியில் இருந்து மும்பைக்கு விமானத்தில் சென்ற போது பக்கத்துச்சீட்டுப் பேமானி ஒருத்தன் பாலியல் டார்ச்சர் கொடுத்திருக்கிறான். பதினெட்டு வயது நிரம்பாத அந்த சிறுமி தைரியமாக புகார் செய்ததில் தற்போதுதான் சிக்கி இருக்கிறான். கைது செய்து வழக்குப் பதிவு செய்து போட்டிருக்கிறார்கள்.