பிக்பாஸ் என்கிற நிழல்யுத்த மைதானம் அந்தக் காலத்து தாராசிங்–கிங்காங் மல்யுத்தம் போல.!
ஒரு நாள் கிங்காங் ஜெயிப்பார் .மற்றொரு நாள் கிங்காங்கை தலைக்குமேல் சுற்றி கிழே போட்டு தாரா சிங் ஜெயிப்பார். அதன் ரகசியங்களை மறைந்த சின்ன அண்ணாமலையிடம் கேட்டிருந்தால் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருப்பார். நாமும் ரசித்திருப்போம்.ஆனால் தமிழரசுக் கழகத்தின் போர்வாள் இன்று உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவர் நடத்தி வந்த ‘சங்கப்பலகை’ வார இதழில் பிக்பாசைக் கிழித்து தொங்க விட்டிருப்பார்.எல்லாமே நாடகம்தானே!
கணவன் மனைவியான பாலாஜி,நித்யா இருவரும் ஒருவர் மீது மற்றவர் பகிரங்கமாக குற்றம் சாட்டி போலீஸ் நிலையம் வரை போனவர்கள். பிரிந்தே வாழ்ந்தார்கள். தனித்து வாழ்ந்த அவர்களை பிக்பாஸ் அழைத்து வந்து கூடிப் பேச வைத்தார்கள். ஆனால் நித்யா மட்டும் வெளியேறி விட்டார்.
சொந்தங்கள் தங்களின் பிரிவாற்றாமையை பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் உறவுகளுக்கு கடிதம் அனுப்புவார்கள். இதுவும் ஒரு காட்சிதான்!
நித்யா எழுதிய கடிதத்தில் “உனக்கு எப்போதும் தோழியாக மட்டும் எப்போது இருப்பேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
கண்ணீர் விட்டார் பாலாஜி!
“இதற்கு டிவிட்டரில் நித்யா பதில்,
“அவர் கண்ணீர் சிந்துவதை ஒன்பது வருடங்கள் கழித்து இப்போதுதான் பார்க்கிறேன்.அவர் மனிதராக இருக்கலாம். ஆனால் கணவராக இருக்க முடியாது”
ஒருவேளை வெற்றி பெற்று பணத்துடன் வந்தால்?
ஆனால் ஒன்றை கட்டாயம் ஒத்துக் கொள்ள வேண்டும் படங்களில் நடிப்பில் கோட்டை விட்டவர்கள் பிக்பாசில் அசத்துகிறார்கள். சிறப்பாக நடித்தால் சினிமாவில் மறு பிரவேசம் நடக்கலாம் என்கிற நம்பிக்கைதான்! மும்தாஜ்க்கு என்ன வேடம் கிடைக்கும்?