எம்.எல்.ஏ. சீட்டுக் கேட்டு தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகரராவை மிரட்டி இருக்கிறார் சங்கரம்மா.
இவர் ஏற்கனவே போட்டியிட்டு காங்.கட்சியிடம் இடத்தை இழந்தவர். இதனால் ஹுசூர் தொகுதியில் இவருக்குப் பதிலாக வேறு ஒருவரை நிறுத்த கட்சியில் ஏற்பாடு நடக்கிறது. சங்கரம்மாவுக்கு கடும் கோபம்.
“தனித் தெலங்கானா மாநிலத்துக்காக முதன் முதலில் தீக்குளித்து இறந்தவன் என்மகன்தான். எனக்கு இந்த தொகுதியில் சீட் கொடுக்கலேன்னா அப்புறம் என் மரியாதை என்னாவது? உனக்கு சீட்டு இல்லேங்கிற சேதி வந்த அடுத்த பத்தாவது நிமிஷமே தற்கொலைதான்.”என மிரட்ட கட்சித் தலைமை ஆடிப் போய் இருக்கிறது.
அட தேவுடா…இப்படியெல்லாம் மிரட்டுகிறார்களே!