நம்ம ஊர்லதான் தெர்மாகோல் மந்திரிகள் இருக்கிறார்கள் என்று நினைத்தால் நாடு முழுவதும் பரவி விளைந்து கிடக்கிறார்கள்.
அடடா! பாரத மாதா பெற்றெடுத்த புத்திர சிகாமணிகளின் பேரறிவை பார்த்தால் அந்த வெள்ளைக்காரனுக்கே காவி அடித்து விடுவார்கள்.
உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் என்பவர் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் தகுதி உள்ளவர்கள் என சொல்கிறார்கள். அந்த அளவுக்கு மூளைக்காரராம். அவர் விவசாயிகளுக்கு சொன்ன அறிவுரை ஒன்றை எடுத்து விடுகிறோம் ,பாருங்கள்.
“நாட்டில் அதிக அளவில் சர்க்கரை நோயாளிகள் இருப்பதற்கு கரும்பு விவசாயிகள்தான் காரணம், ஆகவே அவர்கள் கரும்புக்குப் பதிலாக வேறு பயிர்களை விவசாயம் பண்ண வேண்டும்”!
விக்னேஸ்வரா..எல்லாம் உன்செயல்.! செல்லூர், திண்டுக்கல் என்று எங்கள் ஊர் மந்திரிகள் தேவலாம் போல.!