இந்தியா 1947 -ல் விடுதலை பெற்றபோது மத அடிப்படையில் இரண்டாக பிளவுண்டது. இந்தியா-பாகிஸ்தான் இரு நாடாகியது. அதனால் ஏற்பட்ட கலவரங்களை சரித்திரம் அழுத்தமாகப் பதிவு செய்து வைத்திருக்கிறது. இன்று அண்டை நாடாகி விட்ட பாகிஸ்தானின் அத்து மீறலுக்கு எத்தனை இந்தியர்கள் உயிர் இழந்து வருகிறார்கள் என்பது அன்றாடச் செய்தியாகி இருக்கிறது.
இந்த நிலையில்தான் மத்திய அரசின் அமைச்சர் கிரிராஜ் சிங் ஓர் அர்த்தமுள்ள அச்சத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
“2047-ல் இன்னொரு பிரிவினையை சந்திக்கப்போகிறது. அதற்குக் காரணம் மக்கள் தொகை பெருக்கம்.” என்கிறார்.
இந்திய அரசியல் சட்டப் பிரிவு 35 ஏ பிரிவுப்படி ஜம்மு-காஷ்மீருக்கு எத்தகைய உரிமை இருக்கிறதோ .அதைப்போல மாநிலம் அமையலாம் என எண்ணுகிறாரா எனத் தெரியவில்லை.2947 -ல் அமைச்சரின் கருத்துப்படி 135.7 கோடி மக்கள் தொகை இருக்கலாம் என்கிறார்.
அப்படியானால் எந்த மாநிலத்தில் மக்கள் தொகை பெருக்கம் அதிகமாகும் என நினைக்கிறார்?