Monday, April 27, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

மே 2ல் ஸ்டிரைக்: நடிகர் சங்கத்துக்கு எச்சரிக்கை! அதிரடியில் இறங்கிய தயாரிப்பாளர் சங்கம் !!

admin by admin
April 26, 2026
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது.. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம். தமிழ்குமரன், பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ், துணை தலைவர்கள் ஆர்.கே.சுரேஷ், கமலகண்ணன், செயலாளர்கள் கதிரேசன், ஆர்.ராதாகிருஷ்ணன், இணை செயலாளர் சுஜாதா விஜயகுமார் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர், கலைப்புலி எஸ்.தாணு, எஸ்.வி.சேகர், தேமுதிக மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டடோரும் கலந்து கொண்டனர்.

இப் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட கலைப்புலி எஸ்.தாணு, “நாம் ஒன்றுபட்டு செயல்பட்டால் தான் வெற்றி கிடைக்கும். சங்கம் கொண்டு வந்த அனைத்து தீர்மானமும் நெல்மணிகள் போல் தான் இருக்கும். வருவாய் ஈட்டுவதற்கு நீங்கள் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். ஏற்கெனவே கொண்டு வந்துள்ள தீர்மானங்கள் சிறப்பானவை. உங்களுக்கு (சங்கத்திற்கு) ஒத்துழைப்பு அளிப்பேன்” என்றார்

You might also like

மீண்டும் வெளியாகிறது அஜித்தின் ‘பில்லா’ !

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’!

‘வாரி வாரி’ பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி ‘தீ’!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம்.தமிழ்குமரன் கூறியபோது, “யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் சினிமா படப்பிடிப்புகள் மேற்கொள்ளப்படும். இப்போதுக்கூட ஐசரி கணேஷ் மற்றும் நடிகர் சிம்பு உள்ளிட்டோர் பிரச்சனைகளை யாருக்கும் தெரியாமல் தீர்த்து வைத்தோம். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இனி சிறப்பாக செயல்படும்” என்று கூறினார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவே்ற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு:

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2026-2029- ஆம் ஆண்டிற்கான தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்ததற்காக ஒய்வு பெற்ற நீதியரசர் ராஜேஸ்வரனுக்கும், அவரது உதவியாளர்களுக்கும், சிறப்பான முறையில் அமைதியாக தேர்தலை நடத்திட ஒத்துழைப்பு தந்த காவல்துறையினருக்கும், அரசு அதிகாரிகள் மற்றும் கந்தசாமி நாயுடு கல்லூரி நிர்வாகத்தினர், கல்லூரி உதவியாளர்களுக்கு பொதுக்குழு நன்றி தெரிவித்து கொள்கிறது.
சிறிய முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் மானியத்தொகையைக் கடந்த பத்து ஆண்டுகளாக அரசு வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. அந்த மானியத்தொகையினை புதியதாகப் பதவியேற்க இருக்கும் தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்கிட வழிவகை செய்திட வேண்டும்.

தமிழ்த் திரைப்பட மறுசீரமைப்பு குறித்து தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம். தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொகுப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம் ஆகிய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இனிவரும் காலங்களில் புதிய ஒப்பந்தத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

தமிழ் சினிமாவில் தற்போது ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரம் சரிந்து வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ளது போல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் “Revenue Share” முறையில் தமிழ்நாட்டில் உள்ள தயாரிப்பாளர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து படங்களில் நடிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் நடுத்தர மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை “Revenue Share” முறையில் மட்டுமே தயாரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விஷயத்தை சினிமாத் துறையில் உள்ள அனைவரின் கவனத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யவும், நடிகர் சங்கம் தொடர்ந்து இனி இதே போக்கை கடைபிடித்தால் தொடர் வேலை நிறுத்தம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..

admin

admin

Related Posts

மீண்டும் வெளியாகிறது அஜித்தின் ‘பில்லா’ !
News

மீண்டும் வெளியாகிறது அஜித்தின் ‘பில்லா’ !

by admin
April 25, 2026
‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’!
News

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’!

by admin
April 25, 2026
‘வாரி வாரி’ பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி ‘தீ’!
News

‘வாரி வாரி’ பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி ‘தீ’!

by admin
April 25, 2026
காதல் பாடல்களுக்கு நிகராக, முருகன் தமிழ் கடவுள் ‘பற்றிய பாடல்!
News

காதல் பாடல்களுக்கு நிகராக, முருகன் தமிழ் கடவுள் ‘பற்றிய பாடல்!

by admin
April 25, 2026
சூரியின் ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு!
News

சூரியின் ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு!

by admin
April 25, 2026

Recent News

மீண்டும் வெளியாகிறது அஜித்தின் ‘பில்லா’ !

மீண்டும் வெளியாகிறது அஜித்தின் ‘பில்லா’ !

April 25, 2026
‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’!

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’!

April 25, 2026
‘வாரி வாரி’ பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி ‘தீ’!

‘வாரி வாரி’ பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி ‘தீ’!

April 25, 2026
காதல் பாடல்களுக்கு நிகராக, முருகன் தமிழ் கடவுள் ‘பற்றிய பாடல்!

காதல் பாடல்களுக்கு நிகராக, முருகன் தமிழ் கடவுள் ‘பற்றிய பாடல்!

April 25, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?