
அரசியல்னா ஆதிகாலத்து ஒரிஜினல் நெய் மிட்டாய்க் கடை அல்வாவை சாப்பிடற மாதிரி இங்க நடிகர்கள் ஜொள்ளு விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
சினிமாவை விட சுலபத்தில் கோடிகளை சுருட்டிக் கொள்ள முடியும் என்று முழுப்பாய் சுருட்டிகளாக மாறிக் கொண்டிருக்க ,சில சூப்பர்கள் “அய்யோ..அப்பா ,! அரசியலா, கிட்ட வராதே”என ஓடி ஒளிகிறார்கள்.
ஆளுங்கட்சியாக இருந்து விட்டால் போதும் ,வேற ஒரு பயலும் உள்ள வரக்கூடாது என்று எல்லை கட்டிக்கொண்டு மண்ணிலும் மலையிலும்
கோடிகளை எண்ணி குபேரனுக்கு கடன் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.
இந்த அரசியலுக்கு வரமாட்டேன் என்கிறார் சூப்பர் ஸ்டார் அமீர்கான்.
“இன்னா மனுசன் சார் இந்தாளு! வைரச்சுரங்கத்தை காட்டி அள்ளிக்கோன்னா ஓடுறார் சாரே “என குறைபடும் அளவுக்கு நார்த் இந்தியா குட் மார்க் வாங்குது!
அமீர்கானுக்கு 53 வயசுதான் ஆகுது! மகாராஷ்டிர மக்களின் தண்ணீர் பற்றாக்குறை பற்றி நிறைய பாடுபட்டு வருகிறவர்.அவர் வரமாட்டேன்கிறார். என்ன உலகம்யா!
“வேணாங்க. அரசியல்னா பயமா இருக்கு! நான் அதுக்கான ஆள் இல்ல!நான் ஒரு கம்யூனிகேட்டர் அவ்வளவுதான்! அரசியல் ஆர்வம் அது இதுன்னு எனக்கு எந்த ஆசையும் இல்ல. ஒரு கிரியேட்டிவ் பெர்சன். ஜனங்களை என்டர்டெயின் பண்ணுவேன். பொலிடிசியன்னு சொல்றதை விட பெஸ்ட் கிரியேட்டர்னு சொல்லுங்க. பெருமைப்படுவேன்” என்கிறார் அமீர்கான் .
அட போய்யா!