படங்கள் இல்லையென்றாலும் டிரெண்டிங் கில் இருப்பவர் கருணாஸ் எம்.எல்.ஏ.
குறிப்பிட்ட சாதியைப் பற்றி அவதூறாகப் பேசியதாக போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இது தொடர்பாக நடிகர் கார்த்திக்கிடம் செய்தியாளர்கள் கருத்துக் கேட்டிருக்கிறார்கள். அதற்கு பொதுவான கருத்து சொல்லி இருக்கிறார் .
“இந்தியா முழுவதும் நிராயுதபாணிகளை வேட்டையாடுவது சாதாரணமாகி விட்டது.யாராக இருந்தாலும் கொலை செய்வது கோழைத்தனம். முக்குலத்து மக்கள் நேரடியாக நின்று போராடுவார்களே தவிர கோழைத்தனமாக கொலை செய்ய மாட்டார்கள். கருணாஸ் பேசியதன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை.அது குறித்து நான் பேச விரும்பவில்லை.நியாயத்துக்காக போராடுகிற நாம் அனைவரும் வீரர்களே! பிரித்துப் பேச வேண்டாம்.”