“மனுஷன்யா, பிக்பாசிலிருந்து வெளியேற்றப் பட்டதும் முதல் வேலையாக தலைவரை வந்து பார்த்த பாலாஜியை பாராட்டனும்யா!” என்று கழக வட்டாரம் மகிழ்ச்சியில் இருக்கிறது.
தாடி பாலாஜி அவ்வளவு பெரிய ஆளா என்று கேட்டால் ‘இல்லை’ என்றுதான் பதில் சொல்வார்கள்.
ஆனால் மனிதன்.
“தலைவர் கலைஞர் இயற்கை அடைந்தபோது அவர் பிக்பாஸ் கூட்டுக்குள் அடை பட்டிருந்தார்.அதனால் இரங்கல் தெரிவிக்க இயலவில்லை. விடுபட்டு வந்ததும் கலைஞருக்கு இரங்கல் தெரிவிக்கவும், தலைவர் பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கவும் ஒரு நடிகர் என்கிற முறையில் திமுக தலைவரை சந்தித்தார்” என பாலாஜி தரப்பில் சொல்லப்பட்டது.