கலைஞர் மறைவுக்குப் பின்னர் சென்னையில் அமைதிப் பேரணி நடத்திய மு.க.அழகிரி மீண்டும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.
நேற்று திருவாரூரில் பொதுக்கூட்டம் போட்டு எதிர்வரும் காலத்தில் தனது திட்டம் எப்படி இருக்கும் என்பதை சூசகமாக சொல்லி இருக்கிறார்.
என்ன பேசினார் அழகிரி?
“2014-ல் திமுகவில் இருந்து நீக்கப்பட்டேன்.அதன் பின்னர் கலைஞரை சந்திக்கும் வாய்ப்பை இழந்து விட்டேன்.கிடைக்கவில்லை.
என்னைப் பற்றி கலைஞர் ஒரு புத்தகத்தில் எழுதியதை நான் பத்திரமாக வைத்திருக்கிறேன். “அப்பாவுக்கு தப்பாமல் பிறந்தவன் நீதான்.!நான் அடைந்த சோதனைகளை நீயும் அடைந்திருக்கிறாய் “என எழுதி இருக்கிறார்.
திருவாரூர் இடைத் தேர்தலில் நிற்கும்படி என்னை வற்புறுத்துகிறார்கள். தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் ,
ஒருவேளை நான் போட்டியிட்டால் ஓட்டுகள் கேட்பேனோ, இல்லியோ, எனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சொல்வேன்” என்பதாக பேசி இருக்கிறார்.