தமிழ்ச்சினிமாவில் இரண்டு பிரச்னை. ஒன்று மீ டூ. மற்றொன்று திருட்டுக் கதை. ஆண்கள் மீது பாலியல் குற்றம் சாட்டுவது என்பது அவர்களின் மரியாதையை, கவுரவத்தை வேட்டையாடுவது மட்டுமே என்றாகி விட்டது. பாதிக்கப்பட்ட அர்ஜுன் ,மம்பட்டியான் தியாகராஜன் ஆகியோர் வழக்கு தொடர்ந்து விட்டார்கள். கவிஞர் வைரமுத்து சார்பிலும் வழக்குத் தொடர்வார்கள் என்பதாகத் தெரிகிறது. இந்த நிலையில் இன்று மாலை பிரசாத் லேப் திரை அரங்கில் உத்தரவு மகாராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பேரரசு அமைதியாக பேசினாலும் கங்குகளாக விழுந்தன வார்த்தைகள்.
“செக்குக்கு ஆறு மாசம்தான் வாலிடிட்டி .அதற்குள் செக்கை பாங்கியில் போடவேண்டும்.இல்லாவிட்டால் அது செல்லாததாகி விடும். செக்குக்கு 6 மாசம் வாலிடிட்டி. அப்படியானால் கற்புக்கு ? பத்து வருஷமா ,12, வருசமா?”என்று மீ டூ புகார்களைப் பதிவேற்றிக் கொண்டிருக்கிற குழுவுக்கு ஒரு கேள்வியை வைத்தார்.
“அந்த நடிகர் டபிள் மீனிங்ல பேசினார்,தொட்டுப் பேசுறார் என்றெல்லாம் சொல்ற நடிகைகள் அப்பவே “அப்படியெல்லாம் செய்யாதீர்கள் என எச்சரித்திருக்கலாம்ல.? ஏன் செய்யல? தமிழ் நாட்டின் மிகப்பெரிய டைரக்டர்,அவரது படங்கள் வெற்றி விழா கொண்டாடின.அப்படிப்பட்ட டைரக்டர் தன்னை அறைந்து விட்டார் என்று ஒரு நடிகை சங்கத்தில் புகார் செய்து விட்டார். சில நடிகைகள் குரு அடித்ததாக சொல்லிக் கொண்டார்கள்.ஆனால் இந்த நடிகை மட்டும் புகார் செய்து விட்டார், நடிகர் சங்கத்தில் அத்தனை பேரும் கூடி இருக்க டைரக்டர் மன்னிப்புக் கேட்டார். அப்போது எங்களுக்கெல்லாம் எப்படி வலித்திருக்கும்?
இன்றைக்கு நடிகர் சங்கம்,தயாரிப்பாளர் சங்கம் எல்லாமே சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன, அங்க புகார் பண்ணலாமே! சினிமாக்காரர்களின் வாழ்க்கை கேலிக் கூத்தாகி வருகிறது. எங்கள் சங்கங்கள் என்ன செய்கின்றன என்பது தெரியவில்லை என்கிற தனது வலியையும் பதிவு செய்தார்.