“கட்டி அணைச்சார்,கள்ள முத்தம் கொடுத்தார், பெட்ரூம் போலாமான்னு கேட்டார் “என்று மீ டூ மேட்டர் இன்னும் அணையாமல் கிடக்கிறபோது ஒரு கேமராமேன் ஒரு காரியத்தைப் பண்ணி இருக்கிறார்.
‘கவசம்’பட முன்னோட்ட விழா.
சீனியர் கேமராமேன் சோட்டா கே.நாயுடுவின் பெயரை சொன்னதும் மேடைக்குச் சென்ற அவர் காஜல் அகர்வாலை கட்டி அணைத்து கழுத்தில் அழுந்த முத்தம் கொடுத்தார்.
அசிங்கம்தான்! இருந்தாலும் சீனியரைக் கண்டிக்க முடியுமா?
சிரித்துத் தொலைக்க வேண்டிய கட்டாயம் காஜலுக்கு!
“ஏன்யா இப்படி பண்ணே?”
“தமன் சவால் விட்டார் .காஜலுக்கு முத்தம் கொடுக்க முடியுமான்னு.! முடியும்னு காட்டிட்டேன்” என்கிறார் சீனியர் .
“பெரிசு ,இப்ப அது முக்கியமில்ல. நாளைக்கு காஜல் மீ டூ வில் கதறி அழுதா பொழப்பு நாறிடும் நைனா!”