
நேரில் நண்பர்கள் என்றாலும் அவர்களது நிழல்கள் சண்டை போட்டுக் கொள்ளும் .இது அரசியலில்.!
உலகநாயகன் கமல்ஹாசன்,சூப்பர் ஸ்டார் ரஜினி இருவரும் அரசியலுக்கு வந்திருக்கிற நண்பர்கள்.?
கமல்ஹாசனின் கருத்துகள் ஓரளவுக்கு நிலையாக இருக்கும்.
“ஏழு பேரா? யாரந்த ஏழு பேர்? தெரியாது” என முதல் நாள் சொல்லிவிட்டு மறுநாள் “அந்த ஏழு பேரை தெரியாதா என்ன?”என மழுப்புவது ரஜினி ஸ்டைல்.
இலவசங்களைக் கண்டித்து தளபதி விஜய்யும் ,ரசிகர்களும் தீயாய் இருக்கிறார்கள்.
இலவசங்களுக்கு கமல்ஹாசனும் எதிரிதான்!
“மக்களின் பணத்தை அரசியல்வாதிகள் இலவசம் என்கிற பெயரில் கஜானாவை காலி செய்கிறார்கள்.மக்களை ஏமாற்றுகிறார்கள். பிச்சைக்காரர்களுக்குத்தான் இலவசம் வேண்டும் .உழைக்கும் மக்களுக்கு வேண்டாம்”என்கிறார் கமல்.
“இலவசம் தேவைதான். ஆனால் ஓட்டுக்காக இருக்கக்கூடாது.மக்களின் தரத்தை உயர்த்துவதாக இருக்க வேண்டும் “என்கிறார் ரஜினி.
இலவசங்கள் எப்படி தரத்தை உயர்த்தும் என்பது தெரியவில்லை,!












