
எவ்வித அரசியலும் இல்லாமல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தன்னெழுச்சியாக எழுந்ததுதான் மெரினா புரட்சி .
லட்சக்கணக்கில் திரண்ட இளைஞர்கள்,பெண்கள் ஒரு புதிய வரலாறு படைத்தனர்
.1965-ல் மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டம் திமுக வின் ஆதரவுடன் நடந்தது, ஒரு ஆட்சியை அகற்றியது.
ஆனால் மெரீனா புரட்சியில் எவ்வித அரசியல் கலப்பும் இல்லை. 18 இளைஞர்கள் திரட்டிய மாபெரும் புரட்சி.
இன்று வரை அந்த இளங்கன்றுகள் யாரென பொது வெளிக்குத் தெரியாது.
அந்த இளைஞர்களை சந்தித்து ஆதாரங்களைப் பெற்று எடுக்கப் பட்டிருக்கும் திரைப்படம்தான் மெரீனா புரட்சி.
பசங்க புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள அந்த படத்தை இயக்கி இருப்பவர் எம்.எஸ்.ராஜ்.

இந்த படத்துக்கு சென்சார் போர்டுமுக்கியத் தடையாக இருக்கிறது.
அந்நிய நாட்டு அமைப்பான பீட்டா நமது தமிழக கலாச்சாரம் சார்ந்த ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருப்பதும் அதற்கு பின்னணியாக அரசியல் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
தடைக்கு உறுதுணையாக மூவர் இருக்கிறார்கள் .
மத்திய அமைச்சர் ஒருவர்.
மிகப்பெரிய நடிகை,திரிஷாவாக இருக்கலாமா?
ஒரு எம்.பி.
இந்த மூவர்தான் ஜல்லிக்கட்டு படம் வெளிவராமல் இருப்பதற்கு காரணம் என்கிறார்கள்.
உடன் பிறந்தே கொல்லும் வியாதி என்பதைப் போல இன நலனுக்கு எதிரிகள் அந்த இனத்துக்குள்தான் இருப்பார்கள் என்பதும் உண்மைதான்.!












