பருவப்பெண்களுக்கு கல்யாணக் கனவு!
விடலைப் பையன்களுக்கு காதல் கனவு.! தயாரிப்பாளர்களுக்கு வெள்ளி விழா கனவு.
நடிகைகளுக்கு நம்பர் ஒன் கனவு.
நடிகர்களுக்கு மணிரத்னம்,ஷங்கர் பட ஹீரோ கனவு.
இந்த இரண்டு இயக்குநர்களும் கதைக்காக நடிகர்களைத் தேர்வு செய்யும் சாதி. நடிகர்களுக்காக இவர்கள் கதை பண்ணுவதில்லை.
பிரமாதம் பிரமாண்டம் இவைதான் இந்த இயக்குநர்களின் அடையாளம்.
மணிரத்னம் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.
ஷங்கர் இந்தியன் 2 படத்தில் இறங்கிவிட்டார். இதற்கு அடுத்து முதல்வன் 2 வை கையில் எடுப்பாரா? அப்படி எடுத்தால் யார் ஹீரோ? ஷங்கரின் பதில் என்ன?
“முதல்வன் 2 க்கு தகுந்த மாதிரி கதை அமையவேண்டும் அந்த கதைக்கு யார் தேவைப் படுவாரோ அவர் கிடைக்க வேண்டும்.அது விஜய்யாக இருந்தால் நல்லது”என்று ஷங்கர் கூறி இருந்தார். அது நிறைவேறுமா என தளபதியின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
நிறைவேறுமா?